Young Man Arrested: திருமண ஆசை வார்த்தைக் கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர்; இளம்பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
கள்ளக்குறிச்சியில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 26, திருக்கோவிலூர் (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. பின்னர், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அவர் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் மணிராஜ் (வயது 24) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. Teenager Strangled To Death: வாலிபர் கழுத்தறுத்து கொலை; மர்ம கும்பல் காவல்நிலையத்தில் சரண்..!
இந்நிலையில், இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், மணிராஜ் அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவருடன் உல்லாசமாக (Rape) இருந்துவந்துள்ளார். பின்னர், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, தந்தை செல்வராஜ் (வயது 52), தாய் பாலாயி (வயது 48), சகோதரர் இளவரசன் (வயது 28) ஆகியோருடன் சேர்ந்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த இளம்பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், மணிராஜ் உட்பட 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.