Boy Killed By Strangulation Near Karaikal: காரைக்கால் அருகே கழுத்தறுத்து சிறுவன் கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
காரைக்கால் திருப்பட்டினத்தில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 28, காரைக்கால் (Karaikal News): காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் ஹவுஸ் காலனி சேர்ந்தயை சந்தோஷ் (13) என்பவர் சக நண்பர்களோடு வீட்டின் அருகே விளையாடிய போது சிறுவனை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை தேடி வந்த நிலையில் இரவு வீட்டின் அருகே சிறுவன் கழுத்து அறுபட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பலியான சிறுவன் சந்தோஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். Lorry Driver Hacked To Death: லாரி உரிமையாளர் வெட்டி கொலை.. பல்லாவரம் பகுதியில் பரபரப்பு..!
சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சந்தோஷ் வசித்து வந்த திருப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருடன் சந்தோஷ் விளையாடியதை அப்பகுதியினர் பார்த்ததாகவும், அதைத்தொடர்ந்து கொலை நடைபெற்றுள்ளதால் அந்த இளைஞரே சந்தோஷை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.