Auto Driver Arrested: ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர் கைது..!
அரக்கோணத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம், தொடர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மே 24, அரக்கோணம் (Ranipettai News): திருவாரூர் மாவட்டத்தில் உலா கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் அபிராமி. இவர் கடந்த வாரம் ஆவடியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், அங்கிருந்து திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றார். பின்னர், சாமி தரிசனம் முடித்துவிட்டு, அங்கிருந்து ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு திரும்ப வருவதற்காக மின்சார ரயிலில் இரவு வேளையில் வந்துள்ளார். Minor Girl Suicide: 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை; சுற்றுலா தலத்திற்கு கூட்டிச் செல்ல மறுத்ததால் நேர்ந்த சோகம்..!
இந்நிலையில், அரக்கோணம் சிக்னல் அருகே ரயில் நின்றது. அப்போது, மர்ம நபர் ஒருவர் அபிராமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை (Jewelry Snatch) பறித்து, ரயிலில் இருந்து குதித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, அபிராமி அளித்த புகாரின்பேரில், அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலைய 4-வது நடைபாதையில் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் நேரு நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் (வயது 35) என்பவர் தான், ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் செயின் திருட்டு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, நாகராஜ் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 11 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.