Aavin Milk Tanker Lorry Overturned:ஆவின் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: வீணாக பள்ளத்தில் ஓடிய 3500 லிட்டர் பால்..!
இதனால் 3500 லிட்டர் பால், பள்ளத்தில் கொட்டி வீணானது.
அக்டோபர் 04, திருவள்ளூர் (TamilNadu News): திருவள்ளூர் மாவட்டம் அருகே, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரி பள்ளத்தில் கவிந்து விழுந்ததால், 3500 லிட்டர் பால் வீணானது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் பால் குளிரூட்டும் நிலையம் அமைந்திருக்கிறது. இங்கிருந்து நேற்று அதிகாலை ஆவின் பால் டேங்கர் லாரி, கிட்டத்தட்ட 7000 லிட்டர் பாலுடன், காக்களூரில் இருக்கும் ஆவின் பால் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தது.
திருவள்ளூர் அருகே, காக்களூர் தொழிற்பேட்டையை நெருங்கும் போது, எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி மோதாமல் இருக்க, ஓட்டுநர் லட்சுமணன் டேங்கர் லாரியை சாலையோரமாக ஒதுக்க முயன்றார். Ram Charan at Siddhi Vinayak Temple: மஹாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.!
அப்போது ஆவின் பால் டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. டேங்கர் லாரியில் இருந்த 3500 லிட்டர் பாலும் சாலையோர பள்ளத்தில் வீணாக கொட்டி ஆறு போல ஓடியது.
தகவல் அறிந்தவுடன் காவல் துறையினர் மற்றும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த ஆவின் பால் பண்ணை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, டேங்கர் லாரியை பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.