Car - Lorry Accident in UP (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 23, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் டயர் திடீரென வெடித்தது. டிவைடரில் மோதி எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்து (Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். Yuvraj Singh: சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரணை..!

உடல் கருகி பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து சம்பவம் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ இதோ: