Pune Accident Today (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 12, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் பெய்த் பகுதியில் குந்தேஷ்வர் கோவில் உள்ளது. ஆடி மாதத்தில் இந்த கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் லாரி ஒன்றில் அங்குள்ள கிராமத்தைச் சார்ந்த 35க்கும் மேற்பட்ட பக்தர்கள் குந்தேஷ்வர் கோவிலுக்கு வழிபாடு செய்ய புறப்பட்டுள்ளனர். இவர்கள் மலைபாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.! 

10 பேர் பலி:

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 10 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுத்தரப்பு இரங்கல்:

மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், காயமடைந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதி உதவியும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.