Karur Accident (Photo Credit : Youtube)

நவம்பர் 01, கரூர் (Karur News): கரூர் மாவட்டம் தென்னிமலை பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் இன்று காலை நடந்துள்ளது. லாரி கிராமப்புற சாலையில் பயணம் செய்த போது எதிர் திசையில் வந்த மற்றொரு வாகனத்திற்காக வழிவிட ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், லாரியின் மேல் புறம் அமர்ந்தபடி பயணம் செய்த 3 வட மாநில தொழிலாளர்கள் மீது மண் குவியல் கொட்டி லாரியும் கவிழ்ந்துள்ளது. Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் & வெள்ளி.. இன்றைய விலை நிலவரம்.!

வட மாநில தொழிலாளர்கள் மண்ணுக்கடியில் சிக்கி பலி:

இந்த விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் மண்ணுக்கடியில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு மூவரின் உடலையும் மீட்டனர். இந்த விபத்தில் மூவரும் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரியவரும் நிலையில், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக விபத்தில் உயிரிழந்தது சிக்கந்தர், அஜய், பிரபாகர் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் வட மாநில தொழிலாளர்கள் ஆவார்கள். மேற்படி விபரம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.