Chengalpattu Shocker: மனைவியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்து; நடந்தையில் சந்தேகப்பட்டு குடிகார கணவன் வெறிச்செயல்.. பறிபோன உயிர்.!
நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, தனிமனிதனின் சுயநினைவை இழக்கவைத்து, உடல்நலனையும்-குடும்ப நலனையும் சீரழிக்கும் மதுபானம் ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.
நவம்பர் 02 , திருப்போரூர் (Chengalpattu Crime News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் (Thiruporur, Chengalpattu), கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் சென்டரிங் வேலை செய்து வருகிறார். வெங்கடேசனின் மனுவை அனிதா (வயது 29).
தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, வெங்கடேசனுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு, மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர்களுக்கிடையே குடும்பத்தகராறு, மோதல் தொடர்பான சம்பவங்கள் சில நேரம் நிகழ்ந்துள்ளன.
எப்போதும் சண்டை ஏற்பட்டதும் அனிதா கோபித்துக்கொண்டு சிறுதாவூரில் இருக்கும் தாய் வீட்டிற்கு செல்வதும், பின் வெங்கடேசன் தனது மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த அழைத்து வருவதும் என இருந்துள்ளனர். Stress Relief: இளம் வயதினரிடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்கள்; கண்டறிந்து சரி செய்வது எப்படி?.. விபரம் இதோ.!
சம்பவத்தன்று நடந்த சண்டையில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை, வழக்கம்போல மீண்டும் வீட்டிற்கு வெங்கடேசன் அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை வெங்கடேசன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து மோதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், வெங்கடேசன் மனைவியின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.
பலத்த காயமடைந்த அனிதா இரத்த வெள்ளத்தில் அலறியவாறு வீட்டிற்கு வெளியே வந்து, வாசலில் மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்-பக்கத்தினர் திருப்போரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர், வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.