Bigg Boss Tamil 9 Fight | Kamrudeen Attacks Praveen (Photo Credit : Youtube)

நவம்பர் 04, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 26 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி உபயோகித்து எப்போதும் டாஸ்க் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை எப்படி ஜெயிப்பது? என்று கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் 9-வது சீசனை பொறுத்தவரையில் சிலர் மட்டுமே போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகின்றனர். மற்ற போட்டியாளர்கள் எதற்காக உள்ளே சென்றனரோ அதையே மறந்து ஒன்றும் புரியாதது போல இருக்கின்றனர். அப்படி இருந்ததால் தான் இதுவரை 4 பேர் வெளியேறினர். Bigg Boss Tamil 9 Wild Card: குரூப்பை உடைத்து முகத்திரையை கிழிக்கப்போறோம்.. அனல் பறக்கும் பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்கள்.!

சுவாரஸ்யமில்லாத பிக் பாஸ் 9 (Bigg Boss Tamil Season 9):

பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக திவாகர் தகுதி, தராதாரம் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்து பேசியதால், டென்ஷனான விஜய் சேதுபதி தகுதி, தராதாரம் குறித்து பேச நீங்கள் யார் சார்? என்றும் அவரிடம் கேட்டிருந்தார். மேலும் பெண்களின் பாதுகாப்பின்மையை உறுதி செய்யும் பொருட்டு கம்ருதீன், வினோத் திவாகர் ஆகியோர் நடந்து கொண்டதாகவும் இணையத்தில் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பிக் பாஸ் 9 சீசனில் உள்ளே சென்ற போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களும் பிக் பாஸ் பார்ப்பதை தவிர்க்க தொடங்கியதால், அதனை சமாளிக்க வைல்ட் கார்டு போட்டியாளர்களை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி அனுப்பியுள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அமித் பார்கவ் (Bigg Boss Amit Bhargav), திவ்யா கணேஷ் (Bigg Boss Divya Ganesh), பிரஜின் பத்மநாதன் (Bigg Boss Prajin Padmanabhan), சாண்ட்ரா ஏமி (Bigg Boss Sandra Amy) ஆகியோர் சென்றுள்ளனர்.

பிரவீனை தாக்கிய கம்ருதீன்:

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் மாறி மாறி தாக்கி கொண்ட (Bigg Boss Fight) அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில், கம்ருதீன் பிரவீனை நோக்கி என்னடா பண்ணுவ? என்ன கேட்டுக்கொண்டே தாக்க செல்கிறார். அப்போது பிரஜின் மற்றும் திவாகர் கம்ருதீனை தடுக்க முயற்சி செய்த நிலையில், பிரவீனை நோக்கி நீ ரொம்ப பண்றடா.. என்ன விடுங்க என அனைவரையும் உதறி தள்ளிவிட்டு கம்ருதீன் அடிக்க பாய்கிறார். பிரவீனும் கம்ருதீனை தாக்க முற்பட்ட நிலையில் கம்ருதீன் பிரவீனின் முகத்தில் குத்தி உள்ளார். இதனால் டென்ஷனான பிரஜின் கம்ருதீனை தாக்க சென்ற நிலையில் சாண்ட்ரா என்ன செய்கிறீர்கள்? என கதறி அழுகிறார். எதற்காக இப்படி செய்கிறாய்? என சாண்ட்ரா கதறி அழுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் உண்மை இல்லை எனவும் பிராங்க் எனவும் பிக் பாஸ் 24/7 பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், பலரும் இதனை உண்மையான நம்பி கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் தாக்கிக்கொண்ட ப்ரோமோ: