அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. நேற்று தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல், எகிப்திய அரண்மனை தோற்றம், பழைய காலத்துக்கும், நடப்பு காலத்துக்கமான தொடர்பை அடிப்படையாக கொண்டு வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீடு (Bigg Boss Tamil Season 9 Home):
லிவிங் ரூம், சமையல் அறை மாற்றங்கள் புதிய அனுப்புவதை கொடுப்பதை போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் முதல் நாளே தண்ணீர் பிரச்சனை ஆரம்பிவித்துவிட்டது என்பதால், போட்டி ஒவ்வொரு நாளும் சுவாரஷ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்ச்சைக்கு பெயர்போன சிலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். Bigg Boss Tamil Season 9: விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் முதல் வாட்டர் மெலன் ஸ்டார் வரை.. களைகட்டும் பிக் பாஸ் சீசன் 9.. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரம்.!
முதல்நாளே பஞ்சாயத்தை கூட்டிய வாட்டர் மெலன் ஸ்டார்:
இதனால் முதல்நாள் தொடங்கி முழுவதும் பஞ்சாயத்து நடக்கப்போவதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே வாட்டர் மெலன் ஸ்டார் என்று அறியப்பட்ட டாக்டர் T. திவாகர் பிக்பாஸ் (Watermelon Star Diwagar) சீசன் தொடங்கிய முதல்நாளிலேயே போட்டியாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இவர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்ற நிலையில் அனைவரிடமும் சென்று தன் புகழை பேசி வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் ப்ரவீன் காந்தியை கவர பல்வேறு முயற்சிகளையும் எடுத்தார். நடிப்பு திறமையை மெருகேற்றவும், பிசியோதெரபி மருத்துவமனை கட்டுவதற்கும், தவறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவாகர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
வாட்டர் மெலன் ஸ்டாரிடம் பேசியதும் தெறித்து ஓடிய இயக்குநர்:
Ignore பண்ணிட்டு போங்கடா இவன 🤣#BiggBossSeason9Tamil #BiggBossTamilSeason9 #biggbosstamil9 #BiggBoss9Tamil #BiggBossTamilpic.twitter.com/7gxFehoWHv
— BIGG BOSS TAMIL (@Biggbossnk) October 5, 2025
சக போட்டியாளர்களிடம் வார்த்தை மோதல்:
இந்த நிலையில் திவாகரிடம் சக போட்டியாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். அதிலும் முக்கியமாக பிசியோதெரபிஸ்ட் படித்துவிட்டு டாக்டர் என கூறுவது சரியானதா? என கேள்வி எழுப்பினர். முதலில் அமைதியாக பதில் சொன்னவர் ஒரு கட்டத்தில், "டாக்டர் படித்த எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? மீண்டும் மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்பது நேச்சுரலாக இல்லை. நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு என்ன தெரியும்? மெடிக்கல் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? 5 வருடம் ஒரு விஷயத்தை படித்து விட்டு தான் அனைவரும் டாக்டர் ஆகிறோம். நீங்கள் பேசுவது இந்திய சட்டத்தையே எதிர்ப்பது போல உள்ளது. 100 பக்கம் இருக்கும். நான் உங்களுக்கு சொன்னாலும் புரியாது. அதையெல்லாம் படிச்சவங்களுக்கு தான் தெரியும். என்னிடம் அதே கேள்வியை கேட்காதீங்க என சக போட்டியாளர்களிடம் கத்த தொடங்கினார். இதனால் சிலர் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தும் பலனில்லை.
முதல் வாரத்தில் வெளியேற வாய்ப்பு:
மேலும் முதல் நாளான இன்று "ஒரு நாள் சரக்கு தான் இருக்கு" என்ற பெயரில் டாஸ்க் நடைபெற்று போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் போட்டியாளர்கள் திவாகரை டார்கெட் செய்து பேட்சை ஒட்டினர். இதனால் முதல் வாரத்திலேயே திவாகர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக அவர் வாக்குவாதம் செய்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வாட்டர் மெலன் ஸ்டார் வாக்குவாதம் குறித்த வீடியோ (Watermelon Star Diwagar Fight):
Ivan Parveen raj Ah Paathu Abnormal ah irrukan nu Soldran Dei Frist Nee Normal ah irukiya yaa 😭😵💫#BiggBossTamil#BiggBossTamil9#BiggBossSeasonTamil9pic.twitter.com/RABfhGfQG1
— ❍ʙɪᴛᴏ (@ObitoGenZ) October 6, 2025