அக்டோபர் 07, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. நேற்று தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil 9) ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. முந்தைய சீசன்களை போல இல்லாமல், எகிப்திய அரண்மனை தோற்றம், பழைய காலத்துக்கும், நடப்பு காலத்துக்கமான தொடர்பை அடிப்படையாக கொண்டு வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீடு (Bigg Boss Tamil 9):
லிவிங் ரூம், சமையல் அறை மாற்றங்கள் புதிய அனுப்புவதை கொடுப்பதை போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் முதல் நாளே தண்ணீர் பிரச்சனை ஆரம்பிவித்துவிட்டது என்பதால், போட்டி ஒவ்வொரு நாளும் சுவாரஷ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்ச்சைக்கு பெயர்போன சிலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
கைகலப்பில் முடிந்த குறட்டை பஞ்சாயத்து:
இந்த நிலையில் வாட்டர் மெலன் ஸ்டார் என்று அறியப்பட்ட டாக்டர் T. திவாகர் பிக்பாஸ் (Watermelon Star Diwagar) சீசன் தொடங்கிய முதல்நாளிலேயே போட்டியாளர்களுடன் வாக்குவாதம் செய்தார். முதல் நாளான நேற்று "ஒரு நாள் சரக்கு தான் இருக்கு" என்ற பெயரில் டாஸ்க் நடைபெற்று போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் போட்டியாளர்கள் திவாகரை டார்கெட் செய்து பேட்சை ஒட்டினர். பிக்பாஸ் 8 சீசனில் எப்படி முட்டை பிரச்னை பெரிய பஞ்சாயத்தை கிளப்பியதோ அதுபோல இந்த முறை குறட்டை பிரச்னை கிளம்பியுள்ளது. Bigg Boss Tamil Season 9: முதல்நாளே வாட்டர் மெலன் ஸ்டாரால் வெடித்த பஞ்சாயத்து.. வார்த்தை மோதலில் போட்டியாளர்கள்.!
வாட்டர் மெலன் ஸ்டாரை தாக்க எகிறும் சக போட்டியாளர்கள்:
குறட்டை விடுவது யார்? முதலில் குறட்டை விட்டது யார்? என்று தொடங்கிய வாக்குவாதம் தற்போது கைகலப்பு வரை சென்றுள்ளது. ரம்யா ஜோவுடன் இன்று காலை தொடங்கிய வாக்குவாதத்தை தொடர்ந்து வாட்டர் மெலன் ஸ்டார் நேற்று படிப்பை பற்றி பேசியதால் அனைவரும் நான் என்ன படித்திருக்கேன் தெரியுமா? என அவரிடம் எகிற தொடங்கினர். மேலும் வாட்டர் மெலன் ஸ்டார் நீ யார் என்னை கேட்க என ரம்யாவிடம் கோபப்பட்டதால் அவர் கண்கலங்கி அழ தொடங்கினார். இதனால் சக போட்டியாளர்களிடம் வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் எப்ஜெ திவாகரை அடிக்க கை ஓங்கி அவரை சுற்றி இருந்தவர்கள் வேறு பக்கம் அழைத்து சென்றனர். அதுபோல மகாநதி சீரியல் குமரனும் திவாகரை அடிக்க கை ஓங்கியுள்ளார்.
முதல் வாரத்தில் திவாகர் வெளியேற வாய்ப்பு:
ரம்யாவின் அழுகை பெண் போட்டியாளர்களை கோபப்படுத்தியதால் அவர்களும் திவாகரை தாக்குவதற்கு சென்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி நெட்டிசன்கள் பலரும் இத்தனை சீசன்களில் நடக்காதது 2 நாட்களில் பிக்பாஸ் 9 ல் நடந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். நாமினேஷன் சுற்றில் திவாகர், கலையரசனை அனைவரும் குறிவைத்து நாமினேஷன் செய்த நிலையில், தற்போது திவாகரை டார்கெட் செய்து அனைவரும் தாக்க முற்படுவதால் முதல் வாரத்திலேயே அவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
திவாகரை தாக்க முற்பட்ட போட்டியாளர்கள் - பிக்பாஸ் 2வது ப்ரோமோ :
#Day2 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/R9IfBKqo3v
— Vijay Television (@vijaytelevision) October 7, 2025