Bigg Boss Tamil 9 | VJ Parvathy & Kani Fight (Photo Credit : Youtube)

அக்டோபர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகி 8 சீசன்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil), தற்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. முந்தைய போட்டிகளை போல இல்லாமல் 2கே இளைஞர்கள், அவர்களை கவரும் போட்டியாளர்கள் என இளம் தலைமுறையை கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்ச்சைக்கு பெயர்போன சிலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், எலிமினேஷன் லிஸ்டில் இல்லாத நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து எலிமினேஷன் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தில் இருந்த பிரவீன் காந்தியும் வெளியேற்றப்பட்டார்.

வேலையை காண்பிக்கும் விஜே பார்வதி:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வார சனிக்கிழமையில் ஆதிரை, கம்ரூதின், விஜே பார்வதி, அரோரா உள்ளிட்ட பலரையும் ரோஸ்ட் செய்து விஜய் சேதுபதி பேசி இருந்தார். மேலும் நீங்கள் செய்வது அனைத்தும் ரெக்கார்டு ஆகிக்கொண்டிருக்கிறது. தங்கள் செயல்களில் கவனம் வேண்டும். சில விஷயங்களை யோசிக்காமல் செய்கிறீர்கள். அது தவறான நோக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்து எச்சரித்து இருந்தார். ஆனால் விஜே பார்வதியை என்னதான் ரோஸ்ட் செய்தாலும் அவர் தான் நினைப்பதை தான் செய்வேன் என்பது போல இந்த வாரமும் சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து வருகிறார். அந்த வகையில் காரக்குழம்பு கனியை (Bigg Boss Kani) விஜே பார்வதி (VJ Parvathy) வம்பு இழுத்துள்ளார். Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜ் மீது தீராக்காதல்.. சட்டக்கல்லூரி மாணவியாக அவதாரம் எடுத்த ஜாய் கிரிசில்டா.!

விஜே பார்வதியை வறுத்தெடுக்கும் காரக்குழம்பு கனி:

இது குறித்த ப்ரோமோவில் விஜே பார்வதி கிச்சன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு நான் இறங்க மாட்டேன் என துஷாரிடம் வம்பு இழுத்துள்ளார். நீங்கள் இறங்கிதான் ஆக வேண்டும் என்று துஷார் கூறினாலும் அதனை கேட்க விஜே பார்வதி கேட்க மறுத்தார். இதனால் டென்ஷனான கனி, "சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு கொம்பு முளைக்கவில்லை. நீங்கள் அநியாயமாக ஒரு விஷயத்தை செய்வீர்கள். அதை யாரும் கேட்க கூடாது, பார்க்காமல் சென்று விட வேண்டும் என நினைக்காதீர்கள். அநியாயமாக ஒரு விஷயத்தை செய்துவிட்டு என்ன கார்னர் பண்றாங்க என்று சீன் கிரியேட் செய்தால் நாங்கள் வாயை மூடிக்கொண்டு போவோம் என நினைக்கிறீர்கள். அது யாராலும் முடியாது. நல்லா அறிவு இருப்பவர்களுக்கு உள்ளே இறங்கும். புத்தி இல்லாதவர்களுக்கு என்ன கூறினாலும் உள்ளே இறங்காது. உங்களிடம் பேசுவதும், சுவற்றிடம் பேசுவதும் ஒன்றுதான்" என காரசாரமாக தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கனி காரக்குழம்பு வைப்பதற்கு மட்டுமல்ல, காரசாரமாக பேசுவதிலும் எக்ஸ்பர்ட் என்பதை பார்வதிக்கு உரைக்கும் மாதிரி சொல்லிவிட்டார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் 9 விஜே பார்வதி - காரக்குழம்பு கனி பஞ்சாயத்து வீடியோ (VJ Parvathy - Kani Fight):