Stress to Stress Relief (Photo Credit: Pixabay)

நவம்பர் 02, சென்னை (Health Tips): தற்கொலை ஒரேயொரு காரணத்தால் நிகழ்வதாக தெரிந்தாலும், ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னணியிலும் உயிரியல், உளவியல், சமூக காரணிகள் நிறைந்து இருக்கின்றன. மனஅழுத்தம் 90% தற்கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. மதுவினால் தவறான முடிவெடுக்கும் நபர்களின் உறவினர்கள், மரபணு சார்ந்த எண்ணங்களை எதிர்கொள்வது உண்டு.

இதனைத்தவிர்த்து, உளவியல் ரீதியான பிரச்சனை இளம் தலைமுறைக்கு அதிகம் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் மட்டும் தற்கொலை விகிதம் என்பது 60% அதிகரித்துள்ளது. அதிலும், 15 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு அதிக தற்கொலை எண்ணம் ஏற்பட்டு, அவர்கள் உயிரையும் மாய்கின்றனர். தாயின் மனஅழுத்தம் குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் அவர்களும் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலையை எதிர்கொள்கின்றனர்.

ஆயிரம் பிரச்சனைகள் இருப்பினும், அதனை எதிர்கொள்ள தயார்படுத்துவதே இன்றைய பெற்றோர்களின் முக்கிய கடமையில் ஒன்றாக இருக்கிறது. இளம் வயதுள்ள நபர்கள், தங்களின் உணர்வை யாரிடமும் கூறாமல் தனிமைப்படுத்தி தற்கொலை வரை செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து வழிநடத்த வேண்டும்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 36 மாணவர்களின் தற்கொலை நடக்கிறது. அவர்களில் 13 வயது முதல் 20 வயதுடைய குழந்தைகளின் தற்கொலைக்கு பெற்றோரின் மனநிலை முக்கிய காரணமாகவும் இருக்கின்றது. இனி தற்கொலை எண்ணங்களை கண்டறிதல் குறித்து தெரிந்துகொள்ளலாம். Flipkart Deepawali Offer: யாரும் எதிர்பார்க்காத சலுகை விலையில் சாம்சங், மோட்டோரோலா, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்; பிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ் கொண்டாட்டம்.. விபரம் இதோ.! 

குழந்தைகள் சிறு விசயத்திற்கு கோபப்படுவது, காரணமின்றி கோபம் அடைதல், எதற்கெடுத்தாலும் அறிந்து விழுவது போன்ற உணர்வுகள், முடிவெடுக்க இயலாமல் திணறி தவிப்பது, குழம்புவது, முன்யோசனை இல்லாமல் முடிவுகளை எடுப்பது, ஒருவிசயத்தை செய்வதற்கு முன்பே அதன் முடிவை எண்ணி வருத்தமடைவது, எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாக கையாளத்தெரியாதது, உடல்-மனரீதியான முறைகேடுகள் அல்லது அவரைகளிடம் தவறாக நடத்தல் தற்கொலை எண்ணத்தை அதிகரிக்கும்.

குடும்பத்தில் நிலவு சண்டை, தாய்-தந்தையின் கருத்து வேறுபாடு, குழந்தைகள் வளர்ந்த சூழலில் ஏற்படும் நெருங்கிய உறவினர்களின் தற்கொலை போன்றவையும், படிப்பு அல்லது பிற விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது எதிர்பார்ப்பு தொடர்பான மன அழுத்தம் கூட தற்கொலைக்கு வழிவகை செய்கிறது.

இளம் வயதுள்ள நபர்கள் கல்வி, காதல், எதிர்கால வாழ்க்கை தோல்வி பயம், காத்திருக்க ஐயம் தற்கொலை, சின்னசின்ன தோல்வியை எண்ணி, அவமானமாக கருதி தற்கொலை செய்வது என இருக்கின்றனர். இதனால் மனசோர்வு ஏற்பட்டு, விரக்தி உண்டாகி தற்கொலை எண்ணம் ஆட்கொள்ளும். ஆகையால், மனசோர்வில் இருந்து முடிந்தளவு விடுதலையாகி, போராட வேண்டும்.