Spoiled Cake Affected Childrens: பிறந்தநாளை சிறப்பிக்க கெட்டுப்போன கேக்: குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!

Cake (Photo Credit: Pixabay)

மார்ச் 27, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில், தனது முதல் மகளின் பிறந்தநாளுக்காக, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற அய்யங்கார் பேக்கரியில் கேக் (Bakery Cake) வாங்கி கொடுத்துவிட்டு, அவர் சென்னைக்கு சென்றுள்ளார். Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி – உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!

பின்னர், பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குழந்தைகள் கேக்கை வெட்டி சாப்பிட்டுள்ளனர். கேக்கை சாப்பிட்ட குழந்தைகளுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தாய், கேக் கெட்டு போயிருப்பதை கண்டறிந்தார். உடனடியாக குழந்தைகளை மீட்டு பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த தகவல் குழந்தைகளின் தந்தைக்கு தெரியவர, அவர் பேக்கரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதற்கு, அந்த நிறுவனம் விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறியுள்ளார். ஆனால், குழந்தையின் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்து, அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், 50 கிலோக்கும் மேற்பட்ட கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பேக்கரிக்கு அபராதமும், நோட்டீசும் ஒட்டியுள்ளனர்.