Cow (Photo Credit: @naveengarewal X)

மார்ச் 27, ஜெய்ப்பூர் (Rajastan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில், குஷோரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பசுக்களை (Cow) ஏற்றிக்கொண்டு ஒரு வாகனத்தில் 4 பேர் இன்று வந்துள்ளனர். இவர்களை உள்ளூர் மக்கள் சிலர் வழிமறித்து விசாரித்த போது, தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, உள்ளூர் மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து தாக்கினர். அவர்கள் 4 பேரும், அரியானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு பசுக்களை கடத்திச் சென்றுள்ளது தெரியவந்தது. Elderman Arrested Under POCSO Act: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!

இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உள்ளூர் மக்களிடம் அடிபட்ட அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். வாகனத்தில் ஏற்றி வந்த ஏழு பசுக்களையும் மீட்டு, பசு காப்பகத்திற்கு (Cow Shelter) பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் 4 பேரும் அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களின் மீது பசு கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.