Dead Snake Found in Bakery Puff in Telangana (Photo Credit : @TeluguScribe X)

ஆகஸ்ட் 13, மஹபூப்நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாலா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூரை சேர்ந்த ஸ்ரீசைலா என்ற பெண்மணி தனது குழந்தைகள் சாப்பிட தனியார் பேக்கரிக்கு சென்று முட்டை பப்ஸ் மற்றும் சிக்கன் பப்ஸ் வாங்கி இருக்கிறார். பின் அதனை வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிடப் பிரித்து பார்த்தபோது இறந்த பாம்பு ஒன்று உள்ளே இருந்துள்ளது தெரியவந்தது. Shocking Video: உடலெல்லாம் காயங்கள்.. 15 மாத குழந்தையை கிள்ளி, சுவற்றில் முட்டி தாக்கிய பெண்ணின் பதறவைக்கும் வீடியோ.!

அலட்சியம் காட்டிய கடை உரிமையாளர் :

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி நேராக கடைக்கு சென்று கேட்டபோது ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் பெண்மணி காவல் நிலையத்திலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அதிகாரிகள் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் பீதியை உண்டாக்கி இருக்கிறது. மேலும் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதா? வேண்டாமா? என அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்காக வாங்கிய பப்ஸில் இறந்த பாம்பு இருந்த வீடியோ :