Court Sends Arrested ED Officer To Police Custody: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டிசம்பர் 12, திண்டுக்கல் (Dindigul): மதுரை அமலாக்கத்துறை (ED Officer) அலுவலகத்தில் அதிகாரியாக இருப்பவர் தான் அங்கித் திவாரி(Ankit Tiwari). இவர் முன்னதாக குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி மத்திய பிரதேசத்தில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் தான் மதுரை மண்டலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்கிய அதிகாரி: இந்நிலையில் இவர் சுரேஷ்பாபு என்பவரிடம் லஞ்சம் வாங்கிய தகவல் இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிபவர் தான் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுரேஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில் மதுரைக்கு மாற்றினர்.
அச்சமயம் தான் மதுரைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கித் திவாரி வந்திருந்தார். இந்நிலையில் அங்கித் திவாரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தாங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுபட வேண்டுமானால், தனக்கு மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். Pilgrims Return Without Entering Sabarimala: சபரிமலையில் தரிசனம் செய்யாமலேயே திரும்பும் பக்தர்கள்... நெரிசலான சபரிமலை..!
கையும் களவுமாக சிக்கிய அதிகாரி: தொடர்ந்து சுரேஷ் பாபுவும் அங்கித் திவாரியும் பேரம் பேசி 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக பரிமாற முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 1ம் தேதி முதல் தவணையாக சுரேஷ்பாபு 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அங்கித் திவாரியோ மேலும் 51 லட்சம் ரூபாய் வேண்டும் என்று தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் வழியாக மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவில் சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி துணையுடன் 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து, அமலாக்கத்துறை அங்கி திவாரிக்கு கொடுக்க சென்றுள்ளார் சுரேஷ் பாபு. இந்த நாடகத்தின் படி, கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரி வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். Trending Video: ஆட்டோவில் தொங்கியபடி பயணித்த இளைஞரின் அதிர்ச்சி செயல்: அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பிய அப்பாவி.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: பின் அங்கித் திவாரியை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜே.மோகனா உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த வேண்டும், அதற்கு அனுமதி வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். அந்த மனுவானது மோகனா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் கீழ், அங்கித் திவாரியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கினார். மேலும் டிசம்பர் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அங்கித் திவாரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)