மார்ச் 23, களஹந்தி (Odisha News): ஒடிஷா மனிதில் உள்ள களஹந்தி மாவட்டம், தூவாமல் - ராம்பூர் தொகுதி, தல்நேகி கிராம பஞ்சாயத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் தேபானந்தா சாகர். இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதனிடையே, ஆன்லைன் கேமிங், கிரிக்கெட் சூதாட்டம் போன்றவற்றுக்கு அடிமையாகி இருந்த சாகர், அரசுப்பணத்தில் கைவைத்து மோசடி செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விஷயம் குறித்து ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், சாகர் கிராம பஞ்சாயத்து அதிகாரியாக பணியாற்றி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசுப்பணம் ரூ.3 கோடியை முறைகேடாக பிற வங்கிக்கணக்குக்கு மாற்றம் செய்து மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சாகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார். WhatsApp Group: பள்ளியின் வாட்சப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பிய இளைஞர்; வசமாக ஆப்படித்த நீதிமன்றம் - அந்தோ சிறைவாசம்.! 

விளம்பரப்படுத்தியவர்கள் மீதும் வழக்கு:

மொத்தமாக அவர் ரூ.3.26 கோடி அளவில் பணத்தை கையாடல் செய்து மோசடியாக பயன்படுத்தியது தெரியவந்தது. தேசிய அளவில் நடைபெறும் சூதாட்ட மோசடிகள் காரணமாக 1328 மோசடி செயலிகள் மற்றும் இணையப்பக்கங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதனிடையே தான் கிராம நிர்வாக அதிகாரியின் செயல் அம்பலமாகியுள்ளது. கடந்த 2018 மே மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையில் சாகர் மோசடி செயலை துணிந்து மேற்கொண்டு இருக்கிறார். கைது நடவடிக்கை சாகாரோடு நிற்காமல், அதனை விளம்பரப்படுத்திய யூடியூபர், சமூக ஊடகங்களில் பிரபலமான நபர்களான 11 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.