Broker Suicide: கடன் தொல்லையால் அவதி; வீட்டு தரகர் விஷம் குடித்து தற்கொலை..!

கோயம்புத்தூரில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வருவதாக வீடியோ பதிவிட்டு, வீட்டு தரகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poison Suicide (Photo Credit: Pixabay)

ஜூன் 01, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்த கிரிஷ்குமார் (வயது 51) என்பவர், வீடு பார்த்துக்கொடுக்கும் தரகர் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லூர்து மேரி. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். பின்னர், ரத்தினபுரியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு பெண்ணுடன், கிரிஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக ஒன்றாக வசித்து வருகின்றனர். Dog Attack In Six Week Baby Death: வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி கடித்து தாக்குதல்; ஆறு வார குழந்தை உயிரிழப்பு..!

இந்நிலையில், கிரிஷ்குமார் பல விதங்களில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். மிகவும் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை (Poison Death) செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தது. அதில், 'என் சாவுக்கு யாரும் காரணமில்லை, நான் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வருகிறேன்' என்று அவரது செல்போனில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டறியப்பட்டது.