ஜூன் 01, டென்னசி (World News): அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாக்ஸ்வில்லியில் வசித்து வரும் தம்பதி மார்க்-சோலி மன்சூர். இத்தம்பதிக்கு ஆறு வார குழந்தை எஸ்ரா மன்சூர் உள்ளார். இந்நிலையில், கடந்த மே 24-ஆம் தேதி அன்று, இவர்கள் வீட்டில் வளர்த்த ஹஸ்கி நாய் (Husky Dog), தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை எஸ்ரா மன்சூரை கடித்து தாக்கியுள்ளது. இதனால், குழந்தையின் மூளையில் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம் ஏற்பட்டது. படுகாயமடைந்த குழந்தை கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 30-ஆம் தேதி அன்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். Female Police Suicide: கணவன்-மனைவி இடையே தகராறு; பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை..!
இதனையடுத்து, குழந்தையின் தாயார் சோலி மன்சூர் கூறுகையில், எஸ்ராவின் அம்மாவாக இருந்ததை எண்ணி மிகவும் பெருமையாக கருதுகிறேன். மேலும், குழந்தைகளை தனியாக செல்லப்பிராணிகளுடன் விட்டு செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, எஸ்ராவின் பெற்றோர் மார்க் மற்றும் சோலி மன்சூர் எச்சரித்து வருகின்றனர். எங்களது ஹஸ்கி நாய் இதுவரை எந்தவித ஆக்ரோஷமான செயல்களிலும் ஈடுபட்டது இல்லை. இருப்பினும், இவ்வாறு நடந்துகொண்டது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது, குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். இந்த கடினமான சூழலிலும் அவர்களுக்கு ஆதரவாக ஆன்லைன் நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, நாக்ஸ் கவுண்டி அலுவலகம் தீவிர விசாரணை வந்த நிலையில், சம்மந்தபட்ட ஹஸ்கி நாய் விலங்குகள் காப்பாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மாநில சட்டத்தின்படி, 10 நாள் தனிமைப்படுத்துதலின் கீழ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று யங்-வில்லியம்ஸ் விலங்கு மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.