Tiruvannamalai: புரட்டாசி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்.. போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்.!
கிரிவலத்திற்காக திருவண்ணாமலை சென்ற பக்தர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப உரிய பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டாகியது.
செப்டம்பர் 18, திருவண்ணாமலை (Tiruvannamalai News): பௌர்ணமி கிரிவலம் சந்திரனின் சக்தியை பெற உதவும் என்பதும், பாவங்கள் நீங்கி, பிணிகள் அகன்று, தோஷங்கள் ஏங்கும் என்பதும் முன்னோர் வாக்கு.. இந்த வாக்குகேற்ப ஒவ்வொரு பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் இலட்சக்கணக்கில் குவிவார்கள். அண்ணாமலையாரை தரிசனம் செய்ய 14 கிலோமீட்டர் தூரம் சிவனின் நாமத்தை உச்சரித்தபடி கிரிவலம் (Tiruvannamalai Girivalam) சென்றும் வழிபாடு நடத்துவார்கள்.
550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
அந்த வகையில், பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி நேற்று தொடங்கிய நிலையில், அன்று பௌர்ணமி திதியும் வந்தது. மேலும், மிலாடி நபி காரணமாக நேற்று அரசுப்பொது விடுமுறையும் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால் இலட்சக்கணக்கில் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள், கிரிவலப் பயணம் மேற்கொண்டு பின் அண்ணாமலையாரை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மட்டும் நேற்று ஒரேநாளில் திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. Chennai Shocker: வங்கதேசப்பெண்ணை காதலிப்பதாக நடித்து விபச்சாரத்தில் தள்ளிய காதலன்; சென்னையில் திருட்டுத்தனமாக தங்கி அதிர்ச்சி.!
பயணிகள் அவதி:
தொடர்ந்து, விழுப்புரம், வேலூர், திருச்சி, சேலம், மதுரை உட்பட பல முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருந்தன. நேற்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருவண்ணாமலை சென்ற பக்தர்கள், இன்று மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். இதனிடையே, இன்று காலை 4 மணிமுதல் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில், சரிவர பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சாலை மறியல்:
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மக்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பு வரும் பேருந்தை இடைமறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி இருந்தனர். இதனால் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பயணிகளுக்காக பேருந்துகளை இயக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் சிறிது பரபரப்பு சூழல் அங்கு உண்டாகியது. இரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் என்பது அலைமோதி இருந்தது.
பேருந்துகள் இயக்க வேண்டும் என பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சிகள்: