Chennai Shocker: வங்கதேசப்பெண்ணை காதலிப்பதாக நடித்து விபச்சாரத்தில் தள்ளிய காதலன்; சென்னையில் திருட்டுத்தனமாக தங்கி அதிர்ச்சி.!

சட்டவிரோதமாக காதலியை இந்தியாவுக்குள் அழைத்துவந்த காதலன், அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை சென்னையில் அரங்கேறி இருக்கிறது. இந்த விவகாரத்தில் காதலரான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Chennai Shocker: வங்கதேசப்பெண்ணை காதலிப்பதாக நடித்து விபச்சாரத்தில் தள்ளிய காதலன்; சென்னையில் திருட்டுத்தனமாக தங்கி அதிர்ச்சி.!
Harassment | Love Couple File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 18, வேளச்சேரி (Chennai News): சென்னையில் உள்ள வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 11 வது தெருவில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண், தனது காதலரோடு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டுக்கு இரவு நேரத்தில் வாலிபர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதிமக்கள் வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாலியல் தொழிலில் தள்ளிய காதலன்:

இதனையடுத்து, வேளச்சேரி காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு நடத்தி, வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, வங்கதேசம் நாட்டை சேர்ந்த 27 வயது பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலமானது. அந்த பெண்ணை கைது செய்த காவல் துறையினர், அவருடன் இருந்த திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா பகுதியை சேர்ந்த முகமது யாசின் மியா (வயது 23) என்பவரையும் கைது செய்தனர்.

சென்னைக்கு வர அழைப்பு:

விசாரணையில், வங்கதேச நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் காரணமாக, அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து பலரும் வேலைகளை இழந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னையில் இருந்து வேலை பார்த்து வரும் ரூம்கி என்ற பெண்ணிடம் வேளைக்கேட்டு இருக்கின்றனர். ரூம்கி வேலையை பெறவேண்டும் என்றால் சென்னை வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். 4 Children's Drowned into Lake: விடுமுறை தினத்தில் நடந்த சோகம்; ஏரியில் குளிக்கச்சென்ற அண்ணன், தங்கை நால்வர் பரிதாப பலி.! 

போலி அடையாள அட்டை:

இதனால் வங்கதேசத்தில் இருந்த பெண்மணி, தனக்கு அறிமுகமான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த காதலர் முகமதுவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவரின் உதவியுடன் பட்டதாரி பெண்மணி, பாத்திமா ஆகியோர் 15 நாட்களுக்கு முன்பு திரிபுரா வந்துள்ளனர். சட்டவிரோதமாக திரிபுரா வந்தவர்கள், முகமது யாசினால் தயாரிக்கப்பட்ட போலியான இந்திய குடியுரிமை அடையாள ஆவண அட்டையான ஆதார் உட்பட பிற ஆவணங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

பாலியல் தொழிலில் தள்ளி கொடுமை:

பின் அங்கிருந்து முகமது யாசின் இருவரையும் சென்னைக்கு அழைத்துவந்த நிலையில், ரூம்கியுடன் கூட்டாளி போல செயல்பட்ட முகமது, ரூ.40 ஆயிரம் பணத்திற்கு பாலியல் தரகரான ஹபிள், ஜோஷித் ஆகியோரிடம் இளம்பெண்ணை விற்பனை செய்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், ரூம்கி பாத்திமாவை தன்னுடன் அழைத்து சென்றார். முகமது யாசின் காதலியை ரூம்கி அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார்.

மூவர் கைது; எஞ்சியோருக்கு வலைவீச்சு:

விசாரணையில் உண்மையை அறிந்த காவல்துறையினர், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக வந்த இளம்பெண், காதலியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முகமது யாசின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரூம்கி, பாத்திமா, ஹபிள், ஜோஷித் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).