Road Accident: செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 கார்கள் மோதி விபத்து... போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட விபரீதம்..!
மதுராந்தகம் அருகே ஐந்து கார்கள் ஒன்றன்பின் மோதியதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 29, செங்கல்பட்டு (Chengalpattu): செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரிக்கரை மீது உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்னை செல்லும் பேருந்துகள், சாலையிலேயே நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்கின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. India vs England 1st Test: இந்தியாவை புரட்டி எடுத்த இங்கிலாந்து... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் சிக்கல்..!
இந்நிலையில் நேற்று, பேருந்தில் இருந்து இறங்கிய பயணியர், சாலையைக் கடந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் வந்த 'ஹோண்டா' கார், பயணியர் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்துள்ளார். இதனால், பின்னால் வந்த 5 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் விபத்து காரணமாக 5 கி.மீ. துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர், போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.