India vs England (Photo Credit: @cricbuzz X)

ஜனவரி 29, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (IND vs ENG Test Series 2024),ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களும், இந்திய அணி 436 ரன்களும் எடுத்தது. இதை அடுத்து 190 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடர்ந்து சொதப்பலாக விளையாடி, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. Bus Accident: ஈரோட்டில் பரபரப்பு... கவிழ்ந்த கல்லூரி பேருந்து.. உயிரிழந்த மாணவி.. சிகிச்சையில் பல மாணவிகள்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இந்த தோல்வியின் மூலமாக இந்திய அணி வெற்றி சதவிகிதத்தை இழந்து 43.33 என்ற சதவிகிதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் (Wtc Points Table) 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 55 சதவிகித வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 3 அணிகளும் 50 சதவிகிதத்துடன் 2, 3 மற்றும் 4 ஆவது இடங்களில் உள்ளன. இந்த புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.