Minister SS Sivasankar: சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌ இலவச பேருந்து பயணம்; அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் விளக்கம்.!

சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌., உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும்‌ கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில்‌, ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ளவாறு அனுமதிக்கவு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ உத்தரவு பிறப்பித்த்துள்ளார்.

Minister SS Sivasankar (Photo Credit: @Sivasankar1ss X)

அக்டோபர் 10, சென்னை (Chennai News): இந்தியத் திருநாட்டின்‌ விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மாநில அளவிலான மொழிப்போர்‌ தியாகிகள்‌, தமிழ்‌ மொழி, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ தமிழ்‌ பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள்‌, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்‌ மற்றும்‌ விருதாளர்கள்‌ உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளில்‌, தமிழ்நாடு முழுவதும்‌ கட்டணமில்லாமல்‌ பயணம்‌ மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில்‌ பயணம்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌.

இலவச பேருந்து பயணம்:

60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌, தமிழ்‌ மொழி, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ தமிழ்‌ பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள்‌ உள்ளிட்டோர்‌ வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில்‌ பயணம்‌ செய்திட இயலாத நிலையில்‌, உடன்‌ பயணிக்கும்‌ உதவியாளருக்கும்‌ பேருந்துகளில்‌ கட்டணமில்லா பயண சலுகைகள்‌ குறித்து 2010, 2020 மற்றும்‌ 2023-ம்‌ ஆண்டுகளில்‌ அரசாணைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌, 01.06.2024 முதல்‌ சென்னை மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தில்‌ கட்டணமில்லா பயண சலுகை இணையதளம்‌ வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. Murasoli Selvam: திமுகவின் கொள்கைச் செல்வம்; முரசொலி செல்வம் காலமானார்; திமுகவினர் சோகம்.! 

புகார்கள்:

மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள்‌ பின்பற்றவில்லை எனத்‌ தெரிய வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் தங்களின் கோரிக்கைகளை புகாராக போக்குவரத்துத் துறைக்கும், அமைச்சருக்கும் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் தெரிவித்து இருந்தனர்.

அமைச்சர் விளக்கம்:

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில், சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌, தமிழ்‌ மொழி, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ தமிழ்‌ பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள்‌ உள்ளிட்டோர் இனிவரும்‌ காலங்களில்‌ பயனாளிகள்‌ எவ்வித சிரமமின்றி, பேருந்தில்‌ பயணம்‌ மேற்கொள்ளும்‌ வகையில்‌ அனைத்து தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்களுக்கும்‌, உயர்‌ அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது. இனிவரும்‌ காலங்களில்‌, பயனாளிகள்‌ எவ்வித சிரமமின்றி, பேருந்தில்‌ பயணம்‌ மேற்கொள்ளலாம்‌ என்பதை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.