Murasoli Selvam (Photo Credit: @VelmuruganTVK X)

அக்டோபர் 10, சென்னை (Chennai News): முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர் முரசொலி செல்வம் (Murasoli Selvam). இவர் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும், தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும் ஆவார். தற்போது 84 வயதாகும் முரசொலி செல்வம், உடல்நலக்குறைவால் பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். Car Van Collides: கார் - வேன் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி., இரங்கலுடன், தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர்.! 

கலைஞரின் மூத்த மகனாக உடனிருந்தனர்:

திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்த செல்வம், 55 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்நாளை முரசொலியில் கழித்திருக்கிறார். முரசொலி பதிப்பில் வெளியான சிலந்தி பகுதிகளை செல்வம் எழுதி வந்தார். கலைஞரின் நம்பிக்கைக்குரிய அன்பு மருமகனாகவும், மனசாட்சியாகவும் இருந்து வந்த செல்வம், கலைஞரின் எண்ணத்தை தனது எழுத்துக்களால் பிரதிபலித்து இருக்கிறார். கிட்டத்தட்ட கலைஞரின் மூத்த மகன் போல இருந்து வந்த செல்வம், மு.க ஸ்டாலினை இளைய வயதில் உடன் இருந்து நன்கு கவனித்த அண்ணனாகவும் அவர்களின் குடும்பத்தில் கவனிக்கப்படுகிறார்.

சென்னைக்கு எடுத்து வரப்படும் செல்வத்தின் உடல்:

தற்போது வயது மூப்பு காரணமாக எந்த விதமான பணிகளிலும் எடுபடாமல் இருந்து வந்தவர், சமீபத்தில் உடல்நலக்குறைவை எதிர்கொண்டார். அதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதியானவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் இன்று சென்னைக்கு எடுத்து வரப்படவுள்ளது. முரசொலி செல்வத்தின் மறைவு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளதாக, அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் & முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்: