IPL Auction 2025 Live

7 Month Pregnant Girl Died: உதவாத அபாயசங்கிலியால் இரயில் பயணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; படிக்கட்டு பகுதியில் வாந்தி எடுத்து சோகம்..!

ஊரில் திருவிழா நிறைவுபெற்றதும் வளைகாப்பு செய்து மகிழ்விப்பார்கள் என எதிர்பார்ப்புடன் இரயிலில் பயணித்த பெண்ணின் உயிரை காலன் இரக்கமின்றி ஆட்கொண்ட துயரம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்துள்ளது.

Victim Kasthuri | Railway Track File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay).jpg

மே 03, விருத்தாச்சலம் (Vridhachalam News): சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கொல்லம் (Chennai Egmore to Quilon Kollam Express) நோக்கி பயணிக்கும் அதிவிரைவு வண்டி, நேற்று இரவு உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் (Ulunthurpet) இடையே பயணம் செய்தது. இந்த இரயில் நிறைமாத கர்ப்பிணி (7 Month Pregnant Lady Died) பெண்மணியும் பயணித்த நிலையில், படிக்கட்டு அருகே நின்றவாறு வாந்தி எடுக்க முயற்சித்தபோது தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன உறவினர்கள் மற்றும் அப்பெட்டியில் பயணம் செய்தோர், இரயிலின் அபாயசங்கிலியை (Train Emergency Stop Chain) பிடித்து இழுத்து இரயிலை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. அபாய சங்கிலி அடுத்தடுத்த 2 பெட்டிகளில் செயல்படாத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டு, இறுதியில் 8 கி.மீ தூரம் கடந்து இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்மணி விழுந்த இடம் நெடுந்தூரம் என்பதை அறியாத உறவினர்கள், அவரை அங்கும் இங்குமாக தேடிப்பார்த்தேன். பின் விருத்தாச்சலம் இரயில் நிலையம் நோக்கி பயணித்த இரயில் 08:10 க்கு வரவேண்டியது 20 நிமிட தாமதத்துடன் 08:30 க்கு வந்தது.

கர்ப்பிணியின் உடலை கண்டு கதறியழுத உறவினர்கள்: அங்கு இரயில்வே அதிகாரிகளிடம் நடந்ததை கூறி பெண்ணை மீட்க கூறி கதறினர். இதனையடுத்து, அதிகாரிகள் குழு புறப்பட்டு பெண்ணின் உடலை கண்டறிந்தது. அவரின் உடல் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கி.மீ தொலைவுக்குள் கண்டெடுக்கப்பட்டது. இதனிடையே, உறவினர்களிடம் விசாரித்தபோது, உயிரிழந்த பெண்மணி தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் என்பவரின் மனைவி கஸ்தூரி என்பது தெரியவந்தது. தற்போது கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்படும்போது இரயில் பயணத்தில் தவறி விழுந்து பலியாகினார் என்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் உடலை கண்டு உறவினர்கள் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. College Student Killed Grandfather: சிக்கன் ரைசில் விஷம் கலந்துகொடுத்து தாத்தாவை கொலை செய்த பேரன் - விசாரணையில் பரபரப்பு தகவல்..! 

வளைகாப்பை நோக்கி காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், மேலநீழிதநல்லுர் கிராமம், கிழக்குத்தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது 25). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். சென்னை பெரியார் நகர், திரிசூலம் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி (வயது 22). இவர் பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரி ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்து, தற்போது கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மேலநீழிதநல்லுர் கிராமத்தில் தற்போது திருவிழா நடைபெறுவதால், அங்கு கர்ப்பிணியை அழைத்துச்செல்ல திட்டமிட்ட உறவினர்கள், ஞாயிற்றுக்கிழமையில் அவருக்கு வளைகாப்பு நடத்தவும் திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர்.

அபாயசங்கிலி செயல்படாத காரணத்தால் மீட்பு பணிகளில் தாமதம்: அதற்காக கொல்லம் அதிவிரைவு இரயிலில் சொந்த ஊர்செல்ல சுரேஷ்குமார், அவரின் மனைவி கஸ்தூரி, உறவினர்கள் ஆகியோருக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் எஸ்9 பேட்டியில் பயணித்தனர். இரவு 8 மணியளவில் இரயில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்தபோது, கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. இதனால் அவர் உறவினரின் உதவியுடன் கைகழுவும் இடத்திற்கு சென்று வாந்தி எடுத்து நின்றுள்ளார். அச்சமயம் அவர் இரயிலின் வேகத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற அபாயசங்கிலியை பிடித்து இழுக்க உறவினர்கள் முயற்சித்தும், அது செயல்படாததால் இரயில் நிற்கவில்லை. பின் இரண்டு பெட்டிகள் கடந்து சென்று இரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குள் இரயில் 9 கிமீ தூரம் பயணம் செய்துவிட்டது. Dark Lips Home Remedies: உதடு கருப்பா இருக்கா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! 

துறை ரீதியாக இரயில்வே அதிகாரிகள் விசாரணை: தற்போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் இரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரயிலின் அபாயசங்கிலி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தால் துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது. விருத்தாச்சலம் இரயில்வே காவல்துறையினர், திருமணம் நடந்து 9 மாதங்களே ஆகும் காரணத்தால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்துள்ளனர். இதுதொடர்பாக கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துறைரீதியாக இரயிலின் பராமரிப்பு பணிகள் குறித்த விசாரணைக்கும் திருச்சி இரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.