Poison | Chicken Rice (Photo Credit: Pixabay YouTube)

மே 03, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவர் பகவதி (வயது 20). இவர் கடந்த 30-ஆம் தேதி அன்று நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டில் உள்ளவர்களுக்கு 7 சிக்கன் ரைஸ் (Chicken Rice) வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். Brilliant Performance By Bhuvaneshwar Kumar: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்; அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற புவனேஷ்வர் குமார்..!

இந்நிலையில், வீட்டில் அவரது தாயார் நதியா (வயது 40) மற்றும் தாத்தா சண்முகம் (வயது 67) இவர்கள் உட்பட அனைவரும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளனர். ஆனால், இவர்கள் இருவருக்கும் மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவர்கள் இருவரையும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இவர்கள் இருவரும் சாப்பிட்ட உணவை சேகரித்து, சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பினர். உணவை பரிசோதனை செய்ததில், சிக்கன் ரைசில் விஷம் (Poison) கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, காவல்துறையினர் ஓட்டலின் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் சிக்கன் ரைசை வாங்கி வந்த பகவதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், பகவதி தான் விஷம் கலந்து கொடுத்ததை ஏற்றுக்கொண்டார். மேலும் விசாரணையில், பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையறிந்த அவரது தாத்தா சண்முகம் இவரை கண்டித்துள்ளார். இதன்காரணமாக, ஆத்திரத்தில் சிக்கன் ரைசில் விஷம் கலந்து கொடுத்து தனது தாத்தாவை கொலை செய்துள்ளது கண்டறியப்பட்டது. காவல்துறையினர் பகவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.