Teacher Dies of Heart Attack: பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போதே மாரடைப்பு; வகுப்பறையில் சுருண்டு விழுந்து ஆசிரியர் பலி..!
அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
செப்டம்பர் 18, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் (Pattukottai), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகிறார். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலைபார்த்து வருபவர் செல்லத்துரை (வயது 57). இவர் நேற்று முன்தினம் (செப். 16, திங்கட்கிழமை) அன்று, வழக்கம்போல பணிக்கு சென்றிருந்தவர் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். Sethu Superfast Express: பயணிகளை பதறவைத்த சென்னை - ராமேஸ்வரம் விரைவு இரயில்; நடுவழியில் பிரிந்த இரயில் பெட்டிகள்.!
மாரடைப்பால் மரணம்:
அச்சமயம், திடீரென நெஞ்சு (Heart Attack Death) வலி ஏற்படவே, நெஞ்சை பிடித்தவாறு மயங்கி சரிந்து விழுந்தார். இதனால் பதறிப்போன மாணவிகள் அபயக்குரல் எழுப்ப, பதறியபடி வந்த சக ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, ஆசிரியரின் உயிர் ஏற்கனவே பிறந்துவிட்டது என தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த மாணவிகள், ஆசிரியர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகிப்போயினர்.
ஆசிரியர்கள், மாணவிகள் கண்ணீர்:
சம்பவத்தன்று மாலை சுமார் 03:30 மணியளவில் இத்துயரம் நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல்துறையினர், ஆசிரியரின் மகன் ராகேஷ் வழங்கிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், அவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று அவரின் உடல் பிரேத பரிசோதனை நிறைவுபெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரண்டு வந்து, கண்ணீருடன் தங்களின் அஞ்சலியை செலுத்தினர்.
பின்னர் ஆசிரியர் செல்லத்துரையின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு, சொந்த ஊரான திருநெல்வேலிக்கு புறப்பட்டனர்.