செப்டம்பர் 18, திருச்சி (Trichy News): சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று வரும் பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் சேது (Sethu Sf Express) விரைவு இரயில் சேவை தென்னக இரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் கூட்டத்துடன் நிரம்பி வழியும் சேது விரைவு இரயிலில், அமாவாசை & பௌர்ணமி நாட்களில் ராமேஸ்வரத்திற்கு சென்று வரும் பக்தர்களால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். Thiruvarur Schocker: பள்ளி வளாகத்திலேயே பயங்கரம்; இரண்டு பேர் கும்பலால் ஆசிரியர் மண்டை உடைப்பு.. திருவாரூரில் பரபரப்பு.!
சேது விரைவு இரயில்:
தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பாலம் இரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் (22662 / 22661) மண்டபத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து பேருந்து வசதியுடன் பயணிகள் ராமேஸ்வரம் சென்று வருகிறார்கள். அந்தவகையில், நேற்று இரவு 05:45 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட இரயில், ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்தது.
அதிர்ந்துபோன பயணிகள்:
நள்ளிரவு சுமார் 01:00 மணியளவில் இரயில் திருச்சி நோக்கி வந்துகொண்டு இருந்தது. திருச்சி நோக்கி வந்தபோது, திருச்சி இரயில் நிலையத்திற்கு சில கி.மீ முன்னிலையில் திடீரென இரயில் பெட்டி திடீரென பிரிந்தது. இதனையடுத்து, நடுவழியில் இரயில் நிறுத்தப்பட்ட நிலையில், 10 நிமிடத்திற்குள் கோளாறு சரி செய்யப்பட்டு, இரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணம் தொடங்கியது. நல்வாய்ப்பாக பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை.
இறுதியாக இருந்த 3 பெட்டிகள் மட்டும் திடீரென தனியாக கழன்ற நிலையில், முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்த பயணிகள் பலரும் ஒருகணம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.