Modi Appa- PM Gets Grand Welcome In Tiruchirapalli: "பிரதமர் நரேந்திர மோடி எங்களின் அப்பா": திருச்சி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.!

இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதால், சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Trichy Peoples Welcomed PM Modi (Photo Credit: @VanathiBJP X / Facebook)

ஜனவரி 2, திருச்சி (Trichy): ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணியளவில் (PM Modi TN Visit) திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று வரவேற்றனர்.

நலத்திட்டங்கள் தொடக்கம்: விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை திறந்து வைத்து மக்களிடையே உரையாற்றினார். Puri Jagannath Temple Dress Code: கிழிந்த டிரஸ், ஷார்ட்ஸ் அணிந்து பூரி ஜெகன்நாத் கோவிலுக்கு வர தடை: நிர்வாகம் அதிரடி அறிவிப்பு.! 

PM Narendra Modi TN Visit (Photo Credit: @ANI X)

எங்கள் அப்பா மோடி: திருச்சி வந்த பிரதமருக்கு, தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வரவேற்பு அளித்தனர். பலரும் பிரதமர் மோடியை போற்றி பேசியிருந்த நிலையில், பெண்மணி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி, அவர் தங்களின் அப்பா போன்றவர் என குறிப்பிட்டார்.

நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்கள்: திருச்சி என்.ஐ.டி மாணவர்கள் தங்கும் விடுதி, சேலம் - மேட்டூர் இரட்டை இரயில் பாதை, மதுரை - தூத்துக்குடி மின்மயமாக்கப்ட்ட இரட்டை இரயில் பாதை, திருச்சி - கல்லகம், கல்லகம் - மீன்சுருட்டி, செட்டிகுளம் - நத்தம், காரைக்குடி - இராமநாதபுரம், சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலைகள், காமராஜர் துறைமுகத்தில் உள்ள தங்குமிடம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விரைவு எரிபொருள் சுழற்சி உலை ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். அதேபோல, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.