Tirupattur Shocker: மின்வேலியில் சிக்கி வேட்டைக்கு சென்ற தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி.. திருப்பத்தூரில் துயரம்.!

சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளை வேட்டையாட சென்றவர்கள், சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Tirupattur Electric Fencing Death Case on 22 Sep 2024 (Photo Credit: @Sunnewstamil X)

செப்டம்பர் 22, பெருமாபட்டு (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு, சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 40). இவரின் மகன் லோகேஷ் (வயது 15), உறவினர் கரிபிரான் (வயது 65). இவர்கள் மூவரும் நேற்று பெருமாபட்டு பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு, துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டைக்கு சென்றதாக தெரியவருகிறது. ஏலகிரி மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், அங்கு வயல்வெளி, தோப்பு ஆகியவற்றை வைத்துள்ளார் பயிர்களை காக்க சட்டவிரோதமாக மின்வேலி (Electric Fencing) அமைத்து இருப்பதாகவும் தெரியவருகிறது. இதனிடையே, வனவிலங்கு வேட்டைக்கு சென்ற நபர்கள், முருகன் என்பவரின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இருக்கின்றனர். Tenkasi Earthquake: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் நிலஅதிர்வு? மக்கள் அச்சம்.! 

காவல்துறை & வனத்துறை அதிகாரிகள் விசாரணை:

இதனால் மூவரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலம் அங்கேயே இருந்தது. மறுநாள் காலையில் அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், குரிசிலாப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மின்வேலி அமைத்த நபரிடம் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் காட்டுப்பன்றிகள் தொல்லையை குறைக்க மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.