Tenkasi Junction (Photo Credit: @pandiarasa X)

செப்டம்பர் 22, பாவூர்சத்திரம் (Tenkasi News): உலகளவில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் இயற்கை பேரிடரில், கவனிக்கத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துவது நிலநடுக்கம் (Earthquake). இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் தற்போது இல்லை. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் உயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. துருக்கி - சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை முன்பே கணித்த டச்சு நிலவியல் ஆய்வார், இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கும் தனது அடுத்த எச்சரிக்கையை விடுத்து இருந்தார். Tambaram Shocker: 16 வயது சிறுமி 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; 16 வயது சிறார்கள் உட்பட 3 பேர் கைது.. தமிழகமே அதிர்ச்சி.! 

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நிலநடுக்கம்: 

அவ்வப்போது இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் பல மாதங்களுக்கு முன்பு உணரப்பட்டு செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், திருநெல்வேலி (Tirunelveli Earthquake) மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், ஜமீன் சிங்கம்பட்டி, பாபநாசம், விக்ரமசிங்கபுரம் ஆகிய இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதேபோல, தென்காசி (Tenkasi Earthquake) மாவட்டத்தின் கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சில மணித்துளிகள் அச்சத்தில் வீதியில் தஞ்சம் அடைந்தனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.