Car Van Collide: கார் - வேன் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி., இரங்கலுடன், தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர்.!

மடத்துக்குளம்‌, மைவாடி கிராமம்‌, கருப்பசாமிபுதூர்‌ புதிய புறவழிச்சாலையில்‌ நிகழ்ந்த சாலை விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ நிதியுதவி அறிவித்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tiruppur Car Van Crash (Photo Credit: @PuthiyaThalaimurai X)

அக்டோபர் 10, மடத்துக்குளம் (Tiruppur News): திண்டுக்கல் (Dindigul Family Dies Accident) மாவட்டத்தில் உள்ள பழனி, இந்திரா நகரில் வசித்து வருபவர் மனோன் மணி (வயது 69), இவரின் குடும்ப உறுப்பினர்கள் தியாகராஜன் (வயது 49), பிரீத்தி (வயது 40), ஜெயப்பிரியன் (வயது 12). இவர்கள் நால்வரும் சம்பவத்தன்று திருப்பூர் (Tiruppur Madathukulam Accident) மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் நால்வரும் உடுமலைபேட்டையில் இருந்து பழனி நோக்கி பயணம் செய்துள்ளனர். அதேபோல, பழனியில் இருந்து சுற்றுலா வாகனம் ஒன்று கேரளாவுக்கு சென்றுகொண்டு இருந்தது.

நேருக்கு நேர் மோதி விபத்து:

இந்த இரண்டு வாகனங்களும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், மையவாடி கிராமம், கருப்பசாமி புதூர் புறவழிசாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. கடந்த அக்.08ம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த மேற்கூறிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 12 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்தனர். Weekend Special Bus: ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் முழு விபரம் இதோ.! 

காவல்துறை விசாரணை:

இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் இரங்கல் & இழப்பீடு வழங்க உத்தரவு:

இதனிடையே, விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த நாட்ராயன் (வயது 80) என்பவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்ததோடு, தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.