ஷார்ஷாட் காதலனை தேடி ஓடிய 16 வயது சிறுமி; போக்ஸோவில் இருவரை உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.. விசாரணையில் பகீர்.!
இணையத்தளத்தில் அறிமுகமான நபரின் உண்மைத்தன்மை அறியாமல், காதலனை பார்க்க சென்ற சிறுமி காவலர்களால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 31, திருவண்ணாமலை (Tiruvannamalai News): சென்னையில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கு, அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் ஷார்ஷாட் (Sharechat) உபயோகம் செய்யும் பழக்கத்தை சிறுமி கொண்டிருந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக விக்னேஸ்வரன் (26) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என கூறப்படும் நிலையில், சிறுமி நேற்று முன்தினம் தன்னை காதல் வலையில் வீழ்த்திய நபரை தேடி திருவண்ணாமலை சென்றுள்ளார். அப்போது, சிறுமி தனியாக செல்வதை அறிந்துகொண்ட ராதாகிருஷ்ணன் என்பவர், தானும் திருவண்ணாமலை செல்வதாக கூறி இருக்கிறார். CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!
போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது:
அவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டு இருக்கிறார். இதன்பின் திருவண்ணாமலை சென்ற சிறுமி, காதலரான விக்னேஸ்வரனுடன் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். தனது மகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெங்களூரில் விக்னேஸ்வரனுடன் இருந்த சிறுமியை மீட்டனர். அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் விக்னேஸ்வரன் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கைதான விக்னேஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருக்கிறார்கள். மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வரும் விக்னேஸ்வரன், 16 வயது சிறுமியை ஷார்சாட்டில் காதல் வலையில் வீழ்த்தியது தெரியவந்தது.