Thuraiyur Egg Case: அரசின் சத்துணவு முட்டையில் ஹோட்டலில் ஆம்லேட், கலக்கி.. உணவகத்தை சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு.!
கல்வி பயிலும் மாணாக்கர்கள், உடல் நலனை மேம்படுத்த அரசு முட்டை வழங்கும் சூழலில், அதனை திருட்டுத்தனமாக வெளிப்புற சந்தையில் விற்பனை செய்த சம்பவம் துறையூரில் நடந்துள்ளது.
செப்டம்பர் 19, துறையூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (Thuraiyur) பகுதியில் செயல்பட்டு வரும் ரத்னம் என்ற தனியார் உணவகம் ஒன்றில், சம்பவத்தன்று சத்துணவுகளுக்கு (Nutrition Center Eggs) விநியோகம் செய்யப்பட்ட முட்டைகளை கொண்டு ஆம்ப்லேட், ஆப்பாயில், கலக்கி போன்றவற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் நடந்தது. இந்த விஷயம் குறித்து சமூக ஆர்வலர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர். Chennai Shocker: சூட்கேசில் துண்டு-துண்டாக பெண்ணின் சடலம்; சென்னையில் பேரதிர்ச்சி..!
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
இதனிடையே, இதுகுறித்த வீடியோ வைரலாகிய நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரின் கவனத்திற்கும் இவ்விவகாரம் சென்றுள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உணவகத்தை மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகள்:
துறையூரை பொறுத்தமட்டில், அங்கு அங்கன்வாடிகள், பள்ளிக்கூடம் என 25 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடிகளுக்கு அரசு முத்திரையிட்டு முட்டைகள் வழங்கப்படுகிறது. இவற்றை மாணவர்களுக்கு தினமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள்ள நிலையில், அதனை திருட்டுத்தனமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து ஓட்டல் வரை முட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.