Woman Body Found Chopped in Chennai n 19 Sep 2024 (Photo Credit: @News18TamilNadu / @NewsTamil24X7 X)

செப்டம்பர் 19, துரைப்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள துரைப்பாக்கம் (Thruaipakkam), மேட்டுக்குப்பம், குமரன் குடில் பகுதியில், இன்று சர்ச்சைக்குரிய வகையில் சூட்கேட்ஸ் ஒன்று கிடந்தது. இதில் இருந்து துர்நாற்றமும் வந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சூட்கேஸை (Woman Body Found in Suitcase) திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சிதரும் வகையில், சூட்கேசில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் துண்டு, துண்டாக சடலமாக மீட்கப்பட்டது. Chennai Heatwave: அனலில் நீந்தி தவிக்கப்போகும் சென்னை மக்கள்.. அதிக வெப்பத்திற்கான எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்.! 

காவல்துறை தீவிர விசாரணை:

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணை கொலை செய்தது யார்? சூட்கேஸை இங்கு வீசி சென்றவர் எங்கிருந்து வந்து சென்றார்? என பல கோணங்களில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். பெண்ணின் உடல் துண்டு-துண்டாக இருப்பதால், பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரின் வயது உட்பட பிற விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி கேமிராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேற்கூறிய விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தென்மண்டல இணை ஆணையர் சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவரை கொலை செய்த நபர் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.