Sekar Babu: "தாமரை மலரக்கூடாது விவகாரம்" - அமைச்சர் சேகர்பாபு புதிய விளக்கம்.!
பக்தர்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் அதில் அரசு தலையிடும் என திமுக அமைச்சர் தெரிவித்தார்.
நவம்பர் 08, சென்னை (Chennai News): சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் தலைவர் அமைச்சர் சேகர்பாபு, வளர்ச்சிக்குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பில், ரூ.12.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் போரூர் பசுமை பூங்காவை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்திருந்தார். அப்போது, ஏரியில் சில தாமரைகள் பூத்திருந்த நிலையில், அங்கு மலர்ந்து இருந்த சில தாமரைகளை பார்த்து, "தாமரை எங்கும் மலரக்கூடாது" என அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி இருந்தார். அமைச்சர் பாஜகவை மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியதை புரிந்துகொண்ட அதிகாரிகள் சிரித்தனர். இந்த விஷயம் பாஜக தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்த, பாஜகவை பார்த்தாலே அமைச்சர் பயமாகி, டென்ஷனாகிவிடுகிறார் என பதிலுக்கு கலாய்த்து வந்தனர்.
பாஜகவை கூண்டோடு ஓரங்கட்டிவிட்டோம்:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தாமரை எங்காவது மலர்ந்தால்தானே கோபம் வருவதற்கு. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் இருந்து அவர்களை கூண்டோடு ஓரம்கட்டிவிட்டோம். பின் ஏன் நாங்கள் டென்ஸனாக வேண்டும்?. திமுக தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. நான்கு கால் பாய்ச்சலில் நாடாளுமன்றத்தை சந்தித்துவிட்டு, எட்டுக்கால் பாய்ச்சலில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறோம். Ruckus in JK Assembly: மூன்றாவது நாளாக தொடர் அமளி; ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் மோதல்..!
அவர்களுக்குத்தான் டென்ஷன்:
தமிழ்நாடு முதல்வர் ஒருபுறம், துணை முதல்வர் ஒருபுறம் என அரசியல் மற்றும் மக்கள் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மாவட்ட அமைச்சர்கள், ச.ம.உ, அடிப்படை தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் 234 தொகுதியிலும் வெற்றிபெற முயற்சிக்கிறோம். அதனால், டென்ஷன் எங்களுக்கு இல்லை, எதிர்கட்சிகளுக்குத்தான்.
சிதம்பரம் கோவில் விவகாரத்தில் பதில்:
சிதம்பரம் கோவிலில் கனகசபை விவகாரத்தில், நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்றுக்கொள்ளும். திருக்கோவிலை பொறுத்தவரையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் சொல்வது, எந்த திருகோவிலாக இருந்தாலும் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. கனகசபை ஏறிய மக்களை தடுத்ததால் காரணமாக, அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். நீதிமன்றமும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. பக்தர்களின் நலனை காக்கும் அரசு திமுக. அவர்களும் இந்நாட்டு மன்னர்கள்தான். அவர்களின் அடிப்படை தேவையை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் இடங்களில் அரசு தலையிடும்.
திருக்கோவில் பொதுமக்கள் தரிசனம் செய்யும் இடம். அது குறிப்பிட்ட மக்கள், தீட்சகர்கள் தரிசனம் செய்ய மட்டும் அல்ல. ஆகையால், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கப்பட்டால், தரிசனத்தில் இடர்பாடு இருந்தால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும், நீதிமன்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என பேசினார்.
போரூரில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது எடுக்கப்பட்ட காட்சிகள்: