Namakkal New Bus Stand: ரூ.19.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு; மகிழ்ச்சியில் நாமக்கல் மக்கள்.!
பேருந்து நிறுத்தம், வணிக வளாகங்கள் என நகர பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்ட நாமக்கல் மக்கள், இனி புதிய பேருந்து நிலையத்தால் சற்று நிம்மதி அடையாளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 23, நாமக்கல் (Namakkal News): தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரூ.298.02 கோடி மதிப்புள்ள நிறைவுபெற்ற பணிகளை செலவினங்களை திறந்து வைத்தும், ரூ.365.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நாமக்கலுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி வழங்கப்படும், சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் பழங்கள் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய குளிர் பதனக்கிடங்கு வசதியுடன் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும். நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. Poisonous Mushroom: மழைக்காளானை சாப்பிட என்னமா?.. உஷார்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி..!
ரூ.19.50 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம்:
அதனைத்தொடர்ந்து, நாமக்கல் நகரில் இருந்த பேருந்து நிலையத்திற்கு பதில், மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புதிய பேருந்து நிலையம் ஊருக்கு வெளியே, மாவட்ட-மாநில அளவிலான பேருந்துகள் எளிதில் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.19.50 கோடி தொகை செலவிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை, முதல்வரும் ஆய்வு செய்தார். ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
நாமக்கல் பேருந்து நிறுத்தத்தின் கட்டமைப்பு:
பேருந்து நிறுத்தத்தின் கழுகு காட்சிகள்:
நகர பகுதிகளில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு பேருந்து நிலையமும் ஒரு காரணியாக இருந்த நிலையில், இனி புதிய பேருந்து நிறுத்தத்தால் நாமக்கல் மக்கள் நெரிசல் குறைந்த பயணங்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.