அக்டோபர் 22, புட்லூர் (Tiruvallur News): திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டத்தில் உள்ள புட்லூர், ஈக்காடு கோ-ஆப்டெக்ஸ் நகரில் வசித்து வரும் லட்சுமி, கூட்டுக்குடும்பமாக தனது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கி இருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே அங்கு பெய்யும் மழையால், வீட்டை சுற்றிலும் காளான் (Rainy Season Poisonous Mushroom) முளைத்து இருக்கிறது. விஷத்தன்மை கொண்ட காளானை தவறுதலாக சாப்பிடும் காளான் என குடும்பத்தினர் எண்ணிய நிலையில், அதனை குடும்பத்தினர் உட்கொண்டுள்ளனர். வீட்டின் பழைய கதவுப்பகுதியில் துளிர்விட்டு வந்த காளானை அவர்கள் ஆசையாக சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர். வானிலை: 26 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மருத்துவமனையில் அனுமதி:
இதனை சாப்பிட்ட சில மணிநேரத்தில் லட்சுமி, குடும்ப உறுப்பினர்கள் அலமேலு, வெங்கடேஷ், சரண்யா, லட்சுமி ஆகியோர் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பதறிபோனவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். இரவு நேரத்தில் உடல்நலம் குன்றி மருத்துவமனை வாசலிலேயே மயங்கி விழுந்தனர். பின் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் வீட்டில் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு இருந்த காளான்கள் அகற்றப்பட்டன. குடும்பத்தினரின் உடலநலம் தேறி வருவதாகவும், அவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கவனம் தேவை:
மழைக்காலங்களில் வீடுகளின் பழைய மரக்கட்டைகள் மற்றும் வீட்டை சுற்றிலும் முளைக்கும் காளான் விஷத்தன்மை கொண்டவை ஆகும். ஆசையாக / அலட்சியமாக கூட அதனை சாப்பிட முயற்சிக்க வேண்டாம். இவ்வாறான காளான்கள் நமது உடல்நலனை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதால், அதனை உட்கொண்டவருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் போன்ற தொடர் சங்கிலி விளைவுகள் ஏற்படும். உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காத பட்சத்தில் மரணம் கூட நிகழலாம். அதே நேரத்தில், கடைகளில் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் காளான்கள் வேறு ரகம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.