TVK Vijay Honour to Periyar: பகுத்தறிவு பகலவனின் பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மலர்மாலை வைத்து மரியாதை..!
அறியாமை இருள்களை வெளிச்சம்போட்டு, மக்களிடம் சமஉரிமை, சமூகநீதி என்ற விஷயத்தை ஆழமாக பதித்த பெரியாரின் 146 வது பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது.
செப்டம்பர் 17, சென்னை (Chennai News): பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் (Thanthai Periyar) என போற்றப்படும் ஈரோடு வேங்கடப்பா ராமசாமியின் (Erode Venkatappa Ramasamy) 146 வது பிறந்தநாள் செப் 17ம் தேதியான இன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்தியா வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும், தமிழகத்தில் இருந்த பல அறியாமை இருள்களை வெளிச்சம்போட்டு காட்டி, மக்களுக்கு பகுத்தறியும் திறனை வழங்கி, அறியாமையில் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொடுத்த பகலவனின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரின் பின்தொடர்பாளர்கள், சமூக நல்லிணக்க எண்ணம் உடையோர் கொண்டாடி வருகின்றனர். TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
நடிகர் விஜய் மரியாதை:
இந்நிலையில், சென்னை எழும்பூரில் இருக்கும் பெரியார் திடலில், தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (TVK Vijay), தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயுடன், புஸ்லி ஆனந்த் உட்பட முக்கிய தவெக நிர்வாகிகளும் இடம்பெற்று இருந்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் தனது அரசியல் பயணத்தை பெரியாரின் வழியில் தொடங்கி இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்:
இந்த விஷயம் குறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூட பழக்கவழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர், பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை மூலம், ஏற்றத்தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத்தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர், சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவு பகலவன், தென்னகத்தின் சாக்ரடீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னெடுத்து பேசி வந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதனை முன்னிட்டு தனது திரைப்பட வாழ்க்கைக்கும் தாற்காலிக்காக இடைவேளை விடும் முடிவையும் அவர் எடுத்துள்ளார். கழக பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெறவுள்ளது.
பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்: