Beedi Leaves Smuggling: ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்; கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை..!

Beedi Smuggling Vehicle | Beedi Preparing File Pic (Photo Credit: @ETVBharatTN X Wikipedia)

ஏப்ரல் 26, தூத்துக்குடி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், படகு (Boat)மூலம் கடத்தப்பட உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனையடுத்து, கியூ பிரிவு காவல்துறை அதிகாரி விஜய அனிதா தலைமையில், தகவல் தெரிவிக்கப்பட்ட கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். Benefits Of Saffron: கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன் தரும் குங்குமப் பூவின் நன்மைகள்..!

இந்நிலையில், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற காவல்துறையினர் ஆலந்தலை ஊரின் வடக்கு பக்கம் உள்ள கணேசபுரம் பகுதியில் சென்ற வேனை சந்தேகத்தின் பேரில் மறித்து, அதனை சோதனை செய்தனர். அதில், சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,250 கிலோ எடையுள்ள 42 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேற்கொண்ட விசாரணையில், இவை அனைத்தையும் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக ஆலந்தலை கடற்கரைக்கு கொண்டு சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து பீடி மூட்டைகளை பறிமுதல் செய்து, வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) மற்றும் ஆலந்தலை பகுதியை சேர்ந்த ராஜா (வயது 29) ஆகியோர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.