Saffron (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 26, சென்னை (Health Tips): காஷ்மீர் பகுதிகளில் அதிகளவில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. இவை கேசர், கூங் மற்றும் குங்குமப்பூ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் (Saffron)  ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 3 Died Hit By Train: ரயில் மோதி 3 பேர் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!

சரும பொலிவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை தினமும் பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால், சரும அழகை பாதுகாக்கும். மேலும், கருவுற்ற பெண்களுக்கு (Pregnant Women) 3-ஆம் மாதத்தில் இருந்து, குங்குமப்பூவை (Kungumapoo) பாலில் கலந்து கொடுத்து வந்தால், தாய்க்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதோடு, சுகப்பிரசவத்திருக்கும் வழிவகுக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் 10 கிராம் அளவிற்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது.

புற்றுநோய்க்கான மருந்துகளில் இவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆஸ்துமா பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. நுரையீரலின் திசுக்களின் வீக்கத்தை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலமாக மன உளைச்சல், மனச்சோர்வு நீங்குகிறது. கண் பார்வைக்கும் சிறந்த பயனை அளிக்கிறது. குங்குமப்பூ சரியானதா என கண்டறிய, அதனை சிறிதளவு தண்ணீரில் போட்டவுடனே சிவப்பு நிறமாக மாறினால் அது போலியானது ஆகும். 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறினால் மற்றும் நல்ல மணம் வந்தாலும் அவை நல்ல பயனை தரக்கூடிய குங்குமப் பூவாகும்.