Salem Shocker: குடிக்க பணம் கேட்ட தகராறில் நண்பன் கொலை: நோய் சரியாகத்தால் தாக்கப்பட்ட மருத்துவர்.. சேலத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள்.!
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் நடந்த இருவேறு சம்பவங்களில் நடந்த துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
டிசம்பர் 14, சேலம் (Salem Crime News): சேலம் மாவட்டத்தில் உள்ள மஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் பரசுராமன் மற்றும் சின்னத்தம்பி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் ரௌடிகள் போல வலம்வந்த நிலையில், நெருங்கிய கூட்டாளிகளாகவும் இருந்து வந்துள்ளனர்.
மதியிழக்கவைத்த மதுபோதை: சம்பவத்தன்று இருவரும் மதுபானம் அருந்தி இருக்கின்றனர். பின் வீட்டிற்கு செல்லலாம் என புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது, பாதி வழியில் வாகனத்தை நிறுத்திய பரசுராமன் தனக்கு போதை போதவில்லை என்பதால் மது வேண்டும் என சின்னத்தம்பியிடம் பணம் கேட்டுள்ளார். Joe Biden Face Inquiry: அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது அமெரிக்க பாராளுமன்றம்: தொடரப்போகும் விசாரணை.!
வாக்குவாதம் சண்டை கொலையில் முடிந்தது: சின்னத்தம்பி பணம் தர மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பரசுராமன் கல்லெடுத்து எரிந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. நண்பர் கண்டித்தும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சின்னத்தம்பி, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
குற்றவாளிக்கு வலைவீச்சு: இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்த காவல்துறையினர், பரசுராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரிய வரவே, தலைமறைவான சின்னத்தம்பிக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். Royal Enfield Shotgun 650: ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 வெளியீடு... எவ்வளவு விலை தெரியுமா?..!
கதறிய குடும்பம்: பரசுராமன் கொலை செய்த தகவலை அறிந்து வந்த அவரின் குடும்பத்தினர், உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தோரை சோகத்திற்கு உள்ளாக்கியது. பரசுராமனின் மனைவி தனது இளம் மகனை பார்த்து, "அப்பாவை பாருடா, அவரை எழுந்து வரச்சொல்லுடா" என கலங்கினார்.
மற்றொரு சம்பவம்: இதேபோல, சேலம் ராமகிருஷ்ணர் சாலை பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர். இவரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கௌதம் என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக உடல்நலனில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால், ஆத்திரமடைந்த கௌதம் மருத்துவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். 21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!
மருத்துவர் மீட்பு, நோயாளி கைது: மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பணியாளர்கள், கௌதமை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கௌதம் மேட்டூர் பகுதியில் உள்ள புதுசாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரின் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், மருத்துவர் பாஸ்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் சேலம் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)