டிசம்பர் 14, டெல்லி (Delhi): இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பைக் தான் ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 (Royal Enfield Shotgun 650). இதன் மோட்டோவர்ஸ் பதிப்பை லேட்டஸ்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோவர்ஸ் எடிஷனுக்கும் இந்த புதிய வழக்கமான மாடலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் பெயிண்ட் வேலை. இது தவிர என்ஜின் மெக்கானிசம் போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும். இந்த பைக் ஆனது விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் அல்லது சுமார் ஒரு மாத காலத்திற்குள் இந்த பைக் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக்கின் விலை சுமார் 3.80 லட்ச ரூபாய் அல்லது 4 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Corona Wave in Kerala: கேரளாவுக்கு படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 சிறப்பம்சங்கள்: இந்த பைக் ஆனது ஸ்டென்சில் ஒயிட், க்ரீன் ட்ரில், ப்ளாஸ்மா ப்ளூ மற்றும் ஷீட்மெட்டல் க்ரே என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில் 648 சிசி, ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13.8 லிட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை 240 கிலோவாக உள்ளது.