![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Army-Joe-Biden-Photo-Credit--380x214.jpg)
டிசம்பர் 14, வாஷிங்க்டன் டிசி (Washington DC): அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த ஜோ பைடன் பெருவாரியான வாக்குகள் பெற்று அமெரிக்காவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். துணை பிரதமராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றார்.
ஜோ பைடன் நிர்வாகம் அமெரிக்காவில் ஆட்சியை நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து அரசை விமர்சித்து வருகிறது. ஜோ பைடன் உக்ரைனில் நடக்கும் போர், பாலஸ்தீனியம்-இஸ்ரேல் விவகாரங்களில் பெருவாரியான அரசு தொகைகளை அந்நாட்டுக்கு நிதி உதவியாக வழங்கி வருகிறார். இராணுவ தளவாடங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன. Corona Wave in Kerala: கேரளாவுக்கு படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
இந்த விஷயத்திற்கு சொந்தக் கட்சியிலேயே சந்தித்து வரும் ஜோ பைடன் மீது விசாரணை நடத்த வேண்டும் என எம்பிக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சி கொண்டு வந்த தீர்மானத்திற்கு தற்போது வெள்ளை மாளிகை ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒப்புதலும் அளித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், இது அடிப்படையற்ற அரசியல் சாகசம் என்று விமர்சித்திருக்கிறார். மேலும், நாட்டிற்கு உலகிற்கு முக்கியமான முன்னுரிமைகள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸில் தலைவர்கள் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதாவது, அமெரிக்காவுக்கும், அமெரிக்கா வழிநடத்தும் உலகுக்கும், அதுசார்ந்த யோசனைகளை முன்வைக்க காங்கிரசில் தலைவர் வேண்டும் என்று விமர்சனம் செய்தார். Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!
கடந்த டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி நிர்வாகத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை அதிபர் வெளியேற உத்தரவிட்டார். அதேபோல, ஈரானில் இருக்கும் படைகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன. பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஒழிக்க வழங்கப்பட்டு வந்தது நிதி அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால், உள்நாட்டில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என, மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் மிகப்பெரிய தடுப்புசுவர்கள் அமைக்க அரசின் நிதி செலவழிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஜோபேடனின் ஆட்சி நிர்வாகத்தில் மெக்சிகோ-அமெரிக்கா எல்லை தடுப்புச்சுவர் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகள் பெரிதளவு இல்லை எனினும், பொருளாதார ரீதியாக அதிக உதவிகள் செய்து வருகிறார்.