21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!
Ajith Kumar Bill Movie Poster (Photo Credit: @Thala_RL X)

டிசம்பர் 14, சென்னை (Chennai): கடந்த 1975 ஆம் ஆண்டு ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளியான திரைப்படம் டான். இப்படத்தை தமிழுக்கு ஏற்ப கதைகளை மாற்றி, பில்லா (Billa 1980 Movie) என்ற தலைப்புடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே பெருவாரியான வரவேற்பு பெற்றது.

1980 பில்லா: ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், எம்.எஸ் விசுவநாதன் (M.S. Viswanathan) இசையில், சுரேஷ் பாலாஜி தயாரிப்பில், நடிகர்கள் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, தேங்காய் ஸ்ரீனிவாசன், ஆர்.எஸ் மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், மனோரமா, பிரவீன் பாக்யராஜ் உட்பட பலர் நடித்து, 26 ஜனவரி 1980 அன்று பில்லா படம் வெளியானது.

2007 பில்லா: ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம், கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து அஜித்குமார் (Ajith Kumar) நடிப்பில் மறு உருவாக்கம் (Billa 2007) செய்யப்பட்டது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர்கள் அல்டிமேட் சூப்பர்ஸ்டார் அஜித், பிரபு, ரகுமான், நயன்தாரா, நமீதா, சந்தானம், ஆதித்யா மேனன், ஜான் விஜய் உட்பட பலர் நடித்து படம் வெளியானது. யுவன் சங்கர் ராஜாவின் இசையமைத்திருந்தார். Australia Hindu Temples Attack Issue: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் தாக்கப்படும் விவகாரம்: இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பதில்.!  

Billa 2007 Movie Stills (Photo Credit: @Deekshaa_ X)

கேன்னஸ் வரை சென்ற பில்லா: ஆனந்தா பிலிம் சர்க்யூட் தயாரித்த திரைப்படத்தை பிரமிடு ஷைமிரா, ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. சர்வதேச அளவிலும் படம் வெளியாகி ஏக போக வரவேற்பு பெற்றது. படக்குழுவின் மருவுருவாக்க முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக, 61வது கேன்னஸ் திரைப்பட விழாவிலும் (Cannes Film Festival) திரையிடப்பட்டது. மலேசியாவை கலக்கி வரும் குற்றவாளியாகவும், அப்பாவியாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

காலத்திற்கு ஏற்ப காட்சிகள்: இப்படம் கடந்த 14 டிசம்பர் 2007 அன்று வெளியானது. படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. தற்போது வரை ரஜினியின் பில்லா திரைப்படத்திற்கு கிடைக்கும் அதே வரவேற்பு, அஜித் குமாரின் பில்லா திரைப்படத்திற்கும் கிடைக்கிறது. மறு உருவாக்கம் செய்யப்பட்ட பில்லா திரைப்படத்தில் மாற்றங்கள் ஏதும் பெரிதாக செய்யப்படவில்லை எனினும், காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

பில்லாவின் சாதனையை முறியடித்த மங்காத்தா: மொத்தமாக ரூபாய் 15 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட பில்லா திரைப்படம், 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்திருந்தது. வசூலையும் வாரிக்குவித்தது. மங்காத்தா படம் வெளியாவதற்கு முன்பு வரை, அஜித்தின் பில்லா திரைப்படமே அதிக வசூல் பெற்ற திரைப்படமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளினை சிறப்பிக்கும்பொருட்டு, எக்ஸ் தளத்தில் அஜித்தின் ரசிகர்கள் #16YearsOfBilla என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

பில்லா படத்தின் சில காட்சிகள்:

அல்டிமேட் சூப்பர்ஸ்டார் அஜித்துக்கு ரசிகர் பாராட்டு:

ரஜினிக்கு ஈடுகொடுக்கும் திறன் அஜித்துக்கு மட்டுமே உள்ளதாக ரசிகர் புகழாரம்: