Senthil Balaji: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.!
இதனால் அவர் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
செப்டம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமினில் நேற்று முன்தினம் இரவு விடுதலை செய்யப்பட்டார். அவர் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் 11 மணிமுதல் 12 நாட்களுக்குள் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. TN CM Meets with PM Modi: பிரதமருடன் நேரில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!
நிபந்தனை ஜாமின்:
471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து இருந்தனர். மேலும், மறைந்த தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றும் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து, பல முக்கிய நிர்வாகிகள் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வருகின்றனர். விரைவில் அவர் திமுக தலைமையுடன் நேரில் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்:
இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனையின்படி, இன்று சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகினர். அவரின் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையில் அவர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என பல நிபந்தனைகள் விதித்து முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வந்த செந்தில் பாலாஜி: