செப்டம்பர் 27, டெல்லி (New Delhi): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.7618 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, தாயகம் திரும்பிய முதல்வர், விரைவில் டெல்லிக்கு செல்லவுள்ளதாகவும் அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று டெல்லி புறப்பட்ட தமிழ்நாடு முதல்வர், இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தினார். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பிஎம் ஸ்ரீ திட்டத்தின் சார்பில் நிதி விடுவித்தல், இரண்டாம்கட்ட மெட்ரோ வழித்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்த கோரிக்கையை முதல்வர் முன்வைத்து, அதனை மனுவாகவும் வழங்கி இருந்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு மாநில எம்.பிக்கள், தமிழக அரசின் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர். Pothigai SF Express: பொதிகை எக்ஸ்பிரஸ் இரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல்..! 

பிரதமரை சந்தித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்த காட்சிகள்:

வீடியோ நன்றி: சன் தொலைக்காட்சி

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)