Tamil Thaai Vaalthu: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி; தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.!
ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒரு வரி தமிழ்த்தாய் வாழ்த்தே விடுபட்ட நிலையில், அரசு பணியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் முன் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 25, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை சார்பில், புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு மரபின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) பாடப்பட்டது. அப்போது, தலைமை செயலகத்தில் இருந்த செயலாக்கத்துறையின் அரசு ஊழியர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துப்படும்போது கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதற்கு பதிலாக கண்டமதில் (கண்டம் + அதில்), புகழ்மணக்க என்பதற்கு பதிலாக திகழ் மணக்க என பாடி இருந்தனர். இதோடுமட்டுமல்லாது சில பிழைகளுடன் அவர்கள் நிலைதடுமாறி பாடியிருந்தனர் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை பாடல் பாடப்பட்டது. MTC Conductor Killed: அரசுப்பேருந்து பயணத்தில் தகராறு; வாக்குவாதம் முற்றியதில் நடத்துனர் அடித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் துணை முதல்வர் விளக்கம்:
மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டு பின் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்ட டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்" என்ற வாசகம் விடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து படப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து கண்டனங்கள் குவிந்த நிலையில், அரசுத்துறை அதிகாரிகளே தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையாக பாடிய சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே, இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகவே பாடப்பட்டது. தவறாக ஏதும் பாடப்படவில்லை. அவர் பாடும்போது சில இடங்களில் மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் பாடல் மீண்டும் பாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தேசிய கீதமும் பாடப்பட்டது" என கூறியுள்ளார்.
நிகழ்ச்சி தொடக்கத்திற்கு பின் 16:16 நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி